Neptunearun
  Article
 

ஸ்லம்டாக் மில்லினியர்”-தாராவியர்களை கேவலப்படுத்துகிறது"

ஸ்லம்டாக் மில்லினியர்” தாராவியர்களை கேவலப்படுத்துகிறது: - தாராவியிலிருந்து மகேஷ்: ஸ்லம்டாக் மில்லினியர் நாணயத்தின் ஒரு பக்கத்தை கூட இல்லை, அதில் ஒரு விழுக்காடை பார்த்ததுபோல்தான் இருந்தது இந்த படம். இன்னும் சொல்லப்போனால், படத்தை இயக்கியவருக்கு நாணயமே இல்லை. ஆம்! காரணம் இந்த படத்தில் இடம்பெற்ற பெரும்பாலான காட்சிகளை, தாராவியிலேயே எடுத்ததாக ஒரு நாளேட்டில் விமர்சித்திருந்தார்கள். அது பொய்யான தகவல். இந்த படத்தில் ஒரு குப்பை மேட்டை காண்பிப்பார்கள், அப்படி ஒரு குப்பை மேட்டை தாராவியில் பிறந்து வளர்ந்த நானே இது வரை பார்ததில்லை. தாராவியில் காண்பிப்பதற்கு எத்தனையோ நல்ல செய்திகள் இருக்கின்றன. அதை விட்டுவிட்டு குப்பைமேடு, மலக்குழி என்று பார்க்கும் காட்சிகள் அனைத்திலும் முகம் சுளிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஆங்கில படங்கள் சில ஒரு சில காட்சிகள் ஆபாசமாக இருக்கும். அப்படித்தான் எனக்கும் இப்படத்தில் ஒரு சில காட்சிகள் அருவருப்பாக இருந்தது. தாராவியில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனும், தனது

 

 

தாயகத்தை விட்டு எதிர்காலத்தை நோக்கி பயணத்தை தொடங்கி
ராட்சத அலைகளையெல்லாம், சமாளித்து கரையடைந்து
விஜயத்தை(வெற்றியை) நிலைநாட்டுபவனாக விளங்குகிறான்.

அதுமட்டுமா? எத்தனை தொழில் அதிபர்கள்,எத்தனை குடிசைத்தொழிலாளிகள், எத்தனை வாகன ஓட்டுனர்கள், எத்தனை பள்ளிக்கூடங்கள், எத்தனை மருத்துவமனைகள், எத்தனை அடுக்குமாடி கட்டடங்கள் என்று அடுக்கி கொண்டே போகுமளவுக்கு இங்குள்ள மனித வளங்கள் இருக்கின்றன. ஒரு நகரத்தின் முக்கியமான கூறான போக்குவரத்து வசதிக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது தாராவி என்னும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி. தாராவியில் இருந்து எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமானாலும், அரசு பேருந்து நிலையம், அரசு மின்சார ரயில் நிலையம் என அனைத்தும் மிக அருகில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமா? தாராவியில் ஆண்டாண்டுகாலமாக வாழ்பவன் வேண்டாம், பிழைப்பு தேடி புதிதாக சில மாதக்காலமாக வாழ்பவன் கூட தாராவி விட்டு செல்ல விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், அப்படி ஒரு வசதி!

உலகிலேயே மிகக்குறைந்த விலையில் தன் பசியை போக்கிக் கொள்ள சிற்றுண்டி விடுதிகள், இப்படி அனைத்து வசதியும் கொண்ட தாராவியில் மதம், இனம், மாநிலம், மொழி என்ற பாகுபாடின்றி ஒருங்கிணைந்து வாழ்கிறார்கள் தாராவியர்கள்!

இப்படி எத்தனையோ நல்ல செய்திகளை காண்பிப்பதற்கு பதிலாக,ஏதோ ஒரு பகுதியில் உள்ள குப்பைமேட்டை காண்பித்துவிட்டு, இதுதான் இந்தியா என்று சாமர்த்தியமாக சொல்லிவிட்டார்  இயக்குனர் டேனி பாயில். தாராவியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல இயலாத அளவிற்கு  வறுமை உள்ளதாக சித்தரித்திருக்கிறார்கள். எத்தனையோ உயர்ந்த கனவுகளை  சுமந்து பள்ளிக்கு காலை 6 மணி முதல் 7 மணிவரை பள்ளிக்கு புத்தகப்பை சுமந்து செல்லும் குழந்தைகளை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கும்.

இதே தாராவியிலிருந்து அப்துல்கலாம் சொன்னது போல் கனவுகள் பல சுமந்து நல்ல நிலைக்கு உயர்ந்திருக்கின்ற எத்தனையோ பட்டதாரி இளைஞர்கள், இளைஞிகள் தாராவியிலுள்ள கல்வி வசதிக்கும் ஒரு முக்கியமான சான்று. இது போன்று நம்பிக்கை விதைக்கும் காட்சிகளை இயக்குனரின் ஒளிக்கருவி படம்பிடிக்காதா?என்பதுதான் தாராவி மக்களின் நியாயமான கேள்வி..

பல லட்சங்கள் செலவழித்து வீடுகள் கட்டப்படுகின்றன அதில் கழிவறைகள் அமைப்பதில்லையா? கழிவறை உள்ளதென்பதற்காக வீட்டை கழிவறை அளவிற்கா கீழ்த்தரமாக நோக்குகிறோம்? அதுபோல தாராவியில் குப்பைக்கூலங்கள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளலாம், தாராவியே குப்பைதான் என்று கூறும் மேட்டுகுடி திமிரை எக்காரணம் கொண்டு தாராவியிலேயே பிறந்து வளர்ந்த எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தப்படம், இந்தியர்களை எந்தளவிற்கு புண்படுத்தியிருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன். அமெரிக்காவில் வசித்து வரும் என் நண்பர் ஒருவர் இது குறித்து கூறுகையில், “மூன்று ஆஸ்கர் விருதுகள், அதுவும் தமிழருக்கு கிடைத்திருக்கிறது என்ற பெருமையோடு, மாறுபட்ட படமாக இருக்கும் என்று நம்பித்தான் SlumDog Millionaire படத்திற்கு நானும் என் குடுமபத்தினரும் அமெரிக்காவில் உள்ள திரையரங்கிற்கு சென்றிருந்தோம்.  உள்ளே கண்ட காட்சிகள் பெருத்த ஏமாற்றத்தினை அளித்தன... திரைப்படம் முடிந்து வெளிவரும்போது பெருமையோடு திரும்பி வர இயலவில்லை, அமெரிக்கர்களின் என்னை கீழ்த்தரமாக எண்ணி பார்க்கிறார்களோ என்று  உடல் கூசியது” என்று மிகவும் வருந்தினார்.

குப்பைமேடாக காண்பிக்க பட்ட தாராவியில், தாராவி முழுமையான குப்பைமேடு அல்ல, அங்கேயும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை நேயர்களுக்கு உணர்த்துவதற்கு நானே நேரில் சென்று எடுத்த சில நிழற்படங்கள்……………

மகேஷ்-மும்பைSource: Adhikaalai.com  

 

 

 


Add comment to this page:
Your Name:
Your Email address:
Your message:

 
   
 
=> Do you also want a homepage for free? Then click here! <=